வாழ்க வளமுடன்

Showing posts with label ஞானக் களஞ்சியம். Show all posts

தற்பெருமை பேசுபவர் தன்முனைப்பு மீறி
தவறென்று பிறர் செயலை பிறரை குறை கூறும்
அற்பமனம் உடையோர்கள் சிலர் இருப்பார்  நம்மில்.
அன்புகொண்டு அவர்களையும் அரவணைத்தே நமது
சொற்க்கனிவால்  வாழ்த்தி அவர் சிந்தனையை உயர்த்தி
சூட்சுமமாய் அவர் உயிரை அறிவை அறிந்துய்ய 
நற்பணியை செய்திடுவோம் சமுதாயத  தொண்டாய்.
நம் தகைமை பொறுமைகளைச  சோதிக்க வாயப்பாம். 


                                                                                          மகரிஷி

“எண்ணமே இயற்கையதன் சிகரமாகும்


இயற்கையே எண்ணத்தில் அடங்கிப் போகும்


எண்ணத்தின் நிலைகாட்ட முடிவதில்லை


இல்லை என்று சொல்லவும் யாரும் இல்லை


எண்ணம் எழும் இடமோ ஓர் புள்ளியாகும்


இயங்கி முடியும் அளவோ அகண்டாகாரம்


எண்ணமே செயற்கைக் கருவிகளான அனைத் தினோடு


இயற்கைக் கருவிகளை யெலாம் இயக்கும் சக்தி”

மேட்டினிலே கொட்டுநீர் பள்ளம் ஓடும்
   மேனோக்கி எறிந்த பொருள் நிலம்கவரும்
நாட்டிவைத்த கம்பினிலோ மரத்திலோ போய்
   நட்புடனே கொடி வகைகள் சுற்றிக்கொள்ளும்
சேட்டையாம் இளமையிலே ஆண்பெண் உள்ளம்
   சேர்ந்தொன்றி உடல் அணைய ஆர்வம் கொள்ளும்
கூட்டுறவால் எப்பொருளும் தன்மை மாறும்
   குணங்களெல்லாம் இயற்கையிலே அமைந்ததாகும்.

-யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

தேவை பழக்கம் அமைந்த சூழல் தன்மை
தெளிவடைந்து வரும் அறிவின் உயர்வுகேற்ப
நாவை மனதை செயலை பயன் படுத்தும்
நற் பண்பின் பலபடியில் மக்கள் உள்ளார்
சேவை செய்ய முன் வருவோர் சமுதாயத்தில்
தியாகம் விட்டு கொடுத்தல் பொறுமை அன்பு
யாவையும் தன இயல்பாய் பழகிக்கொண்டு
எவ்வுயிர்க்கும் கருணையோடு ஈகை செய்வோம்.
- வேதாத்திரி மகரிஷி

தன குற்றம் குறை கடமை தன்னுள் ஆய்ந்து
தான் கண்டு தனைத் திருத்தும் தகைமை வந்தால்
ஏன் குற்றம் பிறர் மீது சுமத்த கூடும்?
ஏதேனும் கண்டாலும் மன்னித்தால்
மேன்மைக்கே மனம் உயரும். பிறர் தவற்றால்
மிக வருத்தம் துன்பமது வந்த போதும்
நன்மைக்கேயம் .  செய்த பாவம் போச்சு .
நான் கண்ட தெளிவு இது. நலமே பெற்றேன். 


--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

தற்பெருமை பேசுபவர் தன்முனைப்பு மீறி
தவறென்று பிறர் செயலை பிறரை குறை கூறும்
அற்பமனம் உடையோர்கள் சிலர் இருப்பார்  நம்மில்.
அன்புகொண்டு அவர்களையும் அரவணைத்தே நமது
சொற்க்கனிவால்  வாழ்த்தி அவர் சிந்தனையை உயர்த்தி
சூட்சுமமாய் அவர் உயிரை அறிவை அறிந்துய்ய 
நற்பணியை செய்திடுவோம் சமுதாயத  தொண்டாய்.
நம் தகைமை பொறுமைகளைச  சோதிக்க வாயப்பாம்.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

சாதனையே தேவை

by thirukumaran | Monday, September 20, 2010 | In by NO COMMENTS

அறநெறியைப் போதிக்கப் புதிய நூல்கள்
அவசியமே இல்லை இனி. மேலும் மேலும்     
அறநூல்கள் எத்தனையோ இநநாள்  மட்டும்   
அறிஞர்  பலர் அளித்துள்ளார். அவையே போதும் ;
அறம்பிறழா நெறிநின்று மக்கள் வாழ         
அவசியமாம் பொருள் ளோடு கல்வி கிட்ட
அறவோரே திட்டமிட்டு அமுல்செய்வீரே!
அதன் மூலம் அறம் வளரும்.  உலகம் உய்யும்.     
                    --  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி                          

இல்லறமும் துறவறமும் வேறுவேறாய்   
இதுவரையில் கருதி வந்தார்  உலகமக்கள்   
இல்லறத்தில் வழுவாது கடமையாற்றி
எண்ணத்தை பண்படுத்தி எனையறிந்தேன் 
இல்லறமே கடமைகளின் தொகுப்பு என்றும்
இன்பம் துன்பம் உடலுயிர்  தத்துவம் உணர்ந்து
இல்லறத்தை திறமையுடன் நடத்த ஏற்ற
எண்ண நிலை துறவறம் என்றும் உணர்ந்தேன் .

இல்லறத்தில் மெய்ஞானம் விளங்கி வாழ
இயலாத காலமொன்று இருந்ததுண்டு
இல்லறத்தை விட்டு பலர் துறவை நாடி
எங்கெங்கோ சுற்றி அலைந்தார் அந்நாளில்
இல்லறத்தில் கடமை செய்தே தவம் பயின்று
இறை நிலையை அறியும் முறை கண்டுகொண்டோம்
இல்லறமும் துறவறமும் ஒன்று சேர்ந்து
இணைந்த  உயர் ஆறாம் கண்டோம் மகிழ்ச்சி பெற்றோம்..


தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

குற்றவாளி பாவியென்று யாரும் இல்லை உலகிலே
குறைகளுக்கு காரணமோ பழைய சமுதாயம்
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்
கடமைகளை சிந்தித்து செயலாற்றி மகிழ்வோம்
உற்றசெல்வம் உடலுழைப்பு அறிவு இவை கொண்டு
உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்
மற்றவரை எதிர்பார்த்தல் கையேந்தல் வேண்டாம் 
மாநிதியாம் இஎறைவனை நம் மனத்தடியில் தேர்வோம். 


--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

கவி:
நன்றாக பத்மாசனத்தில் ஆழ்ந்து
    நாள்போக்கத் தூங்கிவிடப் பழகிக் கொண்டு
அன்றாடத் தேவைக்குப் பழம், பால், காய்கள்
    ஆகார மாயுண்டு அறிவைப் பற்றி
என்றேனும் எவரேனும் கேள்வி கேட்க
    இடமின்றி மௌனம் என்று இருந்தீர் போதும்
இன்றேனும் விழிப்படைந்து எழுந்து வாரீர்
    ஈசன்நிலை எளிதாக உணர்த்துகின்றோம்.

பொருள்:
இறையுணர்வைப்பற்றி புரியாமல், பத்மாசனத்தில் அமர்ந்து,
அந்நிலையிலேயே தூங்கிவிடுவதற்குப் பழகி,காலத்தை கழித்து,
பழம், பால், காய்கள் ஆகியவற்றை ஆகாரமாய் உண்டு,
யாராவது கேள்வி கேட்பதற்கு இடம் கொடுக்காமல்,
மௌன சாமியார் என்று மௌனமாக இருந்தது போதும்,
இறைநிலையை எளிதாக உணர்வதற்கு, தூக்கத்தில் இருந்து விழிப்படையுங்கள்.எளிய முறையிலே உயிரை,மனதை, அவற்றிற்கு மூலமான இறையை உணர வாருங்கள்.



தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

1) கண்காது மூக்கு வைத்துக் கதைகள் சொல்லிக்
     
     கருத்துக்குக் கடவுள்தன்னைச் சிறுமை யாக்கிப்

புண்பட்ட நெஞ்சங்கள் மேலும் புண்ணாய்ப்

     போகும் வழியறியாது தவித்து வாழ்வில்

கண்கலங்கி நிற்போர்க்கும் கடவுள் தன்மை

     கர்மத்தின் விளைவாக எழுந்தியங்கும்

உண்மையினை விளக்குவதே இக்காலத்திற்கு

   ஒத்த உயிர்த் தொண்டாகும், உணர்வோம், செய்வோம்.

2) கடவுள்தான் அனைத்தையுமே படைத்தான் என்றேன்

     கண்காது மூக்கு வைத்துக் கதைகள் சொன்னேன்

கடவுள் என்று கற்சிலையை அறையில் வைத்துக்

     கதவு அடைத்துப் பூட்டியும் வைத்தேன் பின் அந்தக்

கடவுளுக்குப் பசிதீர்க்கப் பால் நெய் தேங்காய்

       கனிவகைகள் கற்சிலைமுன் படைத்தேன் ஆனால்,

கடவுள்நிலை அறிந்தபோதென் செய்கை யெல்லாம்

       கண்டு விட்டேன் சிறுபிள்ளை விளையாறட்டாக.

3)  இறைநிலையே அறிவாக இருக்கும்போது

       இவ்வாறிவைச் சிலைவடிவத் தெல்லை கட்டி

குறைபோக்கப் பொருள், புகழ், செல்வாக்கு வேண்டி

        கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;

நிறை நிலைக்கு அறிவு விரிந்துண்மை காண

       நேர்வழியாம் அகத்துவத்தைக் குருவால் பெற்று

முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேட

        முனைந்திடுவாய் காலம் வீணாக்க வேண்டாம்

4)  கட-உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தான்,

        கருத்தறியான் ஊன்றி இதைக் காணவில்லை

கட-உள் என்ற ஆக்கினையின் குறிப்பை மாற்றி,

          கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்

கட-உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்க் கூட்டி

        கடவுள் என்றே சொல்லிச் சொல்லி வழக்கமாச்சு

கட-உள் என்று அறிஞன் ஓர் குறிப்புத்தந்தான்

       கடவுள் எங்கே? என்று பலர் தேடுகின்றார்.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

வாழவேண்டும் என்றெண்ணி மனித னாக

     வந்ததில்லை, எனினும்நாம் பிறந்து விட்டோம்.

வாழவேண்டும் உலகில் ஆயுள் மட்டும்

     வாழ்ந்தவர்கள் அனுபவத்தை தொடர்ந்து பற்றி

வாழவென்ற உரிமை எல்லோர்க்கும் உண்டு
 
     வாழ்வோர்க்குச் சாதகமாய் வாழும் மட்டும்

வாழஉள்ளோர் அனைவருமே ஒன்றுகூடி,

     வகுத்திடுவோம் ஒருதிட்டம் வளமாய் வாழ.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

அரசியல்

by thirukumaran | Saturday, August 21, 2010 | In by NO COMMENTS

கேப்டலிசம், சோஷலிசம், கம்யூனிசம் வேண்டாம்

     கெடுமதியால் லஞ்சம்வாங்கும் ஆட்சியாளர் வேண்டாம்

ஓட்டுப்போடக் காசுவாங்கும், கொடுக்கும்ஆட்சி வேண்டாம்

     உழைப்போரை நசுக்கும்சர்வ அதிகாரம் வேண்டாம்

நாட்டுநலம் காத்துபொது நலம்பேணி வாழும்

    நல்லகல்வி, ஆட்சிறை வளரவழி காண்போம்.

பாட்டுக்களில், கூத்துக்களில் கற்பொழுக்கம் காப்போம்.

     பரந்தஅறி வில்உழைப்பைப் பங்குபோட்டுக் கொள்வோம்.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

கல்லும் மரமும் மௌன நிலையில் நின்று,

     கடமை தவறாது பயனாகும் போது,

சொல்லும் கருத்தும் உடைய தனிதன், ஏனோ

    சுகங்கெட்டுச் சமூகத்தை மறக்க வேண்டும்?

அல்லும் பகலும் ஆசை ஒழிக்க வென்றே,

    ஆசைதனை பேராசை ஆக்கிக் கொண்டு,

தொல்லைபடும் அனபர்களே! சுருங்கச் சொல்வேன்!

    சுய நிலையை அறிய கருதவமே போதும்!

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இறைவெளியே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்

      இதன்திணிவு மடிப்புவிழச் சழலும் நுண்விண்ணாம்

நிறைவெளியில் விண்சுழல, நெருக்குகின்ற உரசல்
   
    நிலைவெளியில் எழுப்புகின்ற நேரலைகள் காந்தமாம்

மறைபொருளாம் காந்தம் தன் மாத்திரைகள் ஐவகை

    மலைக்காதீர்! விண்கூட்டம் மாபூதம் ஐந்துமாம்;

முறையாய் அக்காந்த அலை மனமாம் உயிர் உடல்களில்;

    மதிஉயம்ந்து இவ்வுண்மை பெற மாபிரம்ம ஞானமாம்

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


   

இச்சையின்றியே நாம் உடலாய் வந்தோம்
இச்சைக்கடங்காமலே உடல் மாய்ந்திடும்
இச்சையுள்ளவரையே நம் வாழ்வாகும்
இச்சை ஒழித்திட ஏன் முயலுகின்றீர்கள்.
இச்சை என்பது தேவையுணர்வாகும்
இச்சை மீறச் செயல் வேகமாகிவிடும்
இச்சைச் செயலில் இணைந்திடும் மீறிடும்
இச்சைப் பழக்கத்தால் எண்ணங்களாகிவிடும்.
இச்சையில் கற்பனை எழுவதை ஆய்ந்தறி
இச்சித்தனுபவித்திச்சை இயல்பைப் பார்
இச்சையின் சக்தியை இச்சையில் சேமிக்க
இச்சை உயர்ந்திடும் இன்பம் பெருகிடும்
இச்சை தொடர்புறும் இடமொக்க இயங்டும்
இச்சையின் பலனாகும் இன்பமும் துன்பமும்
இச்சையின் முடிவில் இதே சிவம்
இச்சைத் தத்துவம் இயற்கையின் உச்சமாம்
இச்சித்த பயனாக இதுவரை கண்டதென்ன?
இச்சை சுகதுக்கத்தபாலும் உள்ளதோ?
இச்சையின் காரணம் என்ன? வினவிக்கொள்
இச்சை இருப்பு இயல்பியக்கம் தோன்றும்
இச்சையின்றேல் ஏது இப்பிரபஞ்சம்
இச்சைக்குள்தானே இயங்குகிறது
இச்சை விரிந்திட ஐம்புலனே வழி
இச்சை அறிவென்ற பெயர் பெற்றதினாலே
இச்சை ஒலி, ஒளி போல் எழும் மாறிடும்
இச்சை வெளியோடு இணைந்து ஒன்றாகிவிடும்
இச்சை இயங்காத இடமதே சூனியம்
இச்சையும் அதுவாகி இரண்டற்றுப் போமங்கே
இச்சையே ஒரு நாடக மன்றம் போல்
இச்சையே அதில் எண்ணற்ற நடிகரும்
இச்சையே அதைப் பார்ப்போர் ரசிப்போராம்
இச்சையே அதன் நிர்வாகி உடையவன்
இச்சை தோன்றும் சுயமாகவும் பிறர்
இச்சையும் உன்னுள் பிரதி பலித்திடும்
இச்சை எழும் போதே ஆய்வோர் அறிவார்கள்
இச்சை இச்சையாலும் திறன் காண்பார்
இச்சை வேகமே மீறிட மீறிட
இச்சிக்கும் வேகமாய் இயங்கும் நிலையைப்பார்
இச்சை வேகமும் இயங்கும் வேகமும்
இச்சித்தறிந்திட இரண்டும் நீ அவ்விடம்
இச்சை இயங்கும் நிலைக்கேற்ப பெயர் பெறும்
இச்சையே காம முதலான அருகுணம்
இச்சையின்றேன் உயர் ஞான்ந்தான் ஏது?
இச்சையே நி நான் இவர் அவர் என்பதும்
இச்சையின் மூலமும் முடிவும் ஒரே நிலை
இச்சை ரசிப்பது எண்ணுதல் அறிவாகும்
இச்சை பொருள் வரை இயங்க ஐயுணர்வாகும்
இச்சை உயர்ந்து தன்னிலை கண்டால் ஞானமாம்
இச்சையை புள்ளியாய் நிறுத்தப் பழகிடு
இச்சை விரிந்தால் ஆராய்ச்சியாக்கிடு
இச்சை விரிந்து பேராதார நிலையெய்த
இச்சைப் புலன்களை வென்று நிலை பெறும்
இச்சை முதல் படி * காமதேனு வென்பார்
இச்சை ஒழுங்குற்றால் கற்பகம் என்பார்கள்
இச்சை உயர்நிலை சிந்தாமணி யாகும்
இச்சை நிலைக்கேற்ப இம்மூன்று பேர் பெறும்
இச்சை வேகம் தடைப்படும் காலத்தில்
இச்சைச் சினமாக கவலையாய் நிலைமாறும்
இச்சையின் தோற்றமும் கவலையாய் நிலைமாறும்
இச்சை தோற்றமும் முடிவுமறிந்திடில்
இச்சையே எல்லை யற்ற பராபரம்.

அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

அகத் தவத்தின் பொருள் கண்டு
அதன் பெருமை உணர்ந்திடுவீர்!
அகத் தவமோ உயிரினிலே
அறிவை ஒடுக்கும் பயிற்சி!
அகத் தவத்தால் மேலும் உயிர்
அம்மாகி மெய்ப்பொருளாம்!
அகத் தவத்தால் வீடுணர்ந்து
அமைதி பெற்று இன்புறலாம்
அகத் தவத்தால் ஐம்புஅனை அடக்கி
அறிவறிந் திடலாம்!
அகத் தவத்தால் அறு குண
ஆளுமைப் பேறடைந்திடலாம்!
அகத் தவத்தால் இல்லறத்தை
அன்பகமாய் ஆற்றிடலாம்!
அகத் தவத்தால் அனைத்துயிர்கள்
அருநட்பைப் பெற்றிடலாம்!


அகத் தவம் தீவினை யகற்றும்
அருள் நெறியை இயல்பாக்கும்!
அகத் தவமே இறைவழிபாடனைதிலும்
ஓர் சிறந்த முறை!
அகத் தவமே உயிர் வழிபாடதனை
விளக்கும் ஒளியாம்!
அகத் தவமே மதங்களெல்லாம்
அடைய விரும்பும் முடிவு!
......யோகிராஜ் வேதாத்திரி மகரிசி

எப்பொருளை எச்செயலை எக்குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றங்கானும்;
இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்
எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும். 
வேதாத்திரி மகரிஷி

               மோனநிலையின் பெருமை யார் எவர்க்கு

                                               முன்படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்?

                            மோனமே அறிவினது அடித்தளம் ஆம்;

                                              மிகவிரிவு! எல்லையில்லை! காலம் இல்லை!

                             மோனத்தின் அறிவு தோய்ந்து பிறந்தால்,

                                             முன்வினையும் பின்வினையும் நீக்கக் கற்கும்;

                             மோனநிலை மறவாது கடமை ஆற்ற,

                                              மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்.

                                                      - வேதாத்திரி மகரிஷி, ஞானக் களஞ்சியம், பாடல்: 1640