வாழ்க வளமுடன்

தற்பெருமை பேசுபவர் தன்முனைப்பு மீறி
தவறென்று பிறர் செயலை பிறரை குறை கூறும்
அற்பமனம் உடையோர்கள் சிலர் இருப்பார்  நம்மில்.
அன்புகொண்டு அவர்களையும் அரவணைத்தே நமது
சொற்க்கனிவால்  வாழ்த்தி அவர் சிந்தனையை உயர்த்தி
சூட்சுமமாய் அவர் உயிரை அறிவை அறிந்துய்ய 
நற்பணியை செய்திடுவோம் சமுதாயத  தொண்டாய்.
நம் தகைமை பொறுமைகளைச  சோதிக்க வாயப்பாம். 


                                                                                          மகரிஷி

ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரையில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை இருபத்தைந்து தடவை வாழ்த்தினால் ஒரு மாதத்திலேயே குடும்பத்தில் நல்லபடியான சூழ்நிலை உருவாவதைக் காணலாம்.

         வாழ்த்தும் போது தெய்வீக நிலையில், அமைதி நிலையில் இருந்து கொண்டு வாழ்த்த வேண்டும். இந்த முறையில் வாழ்த்தின் மூலம் உலகத்தையே மாற்றி அமைத்து விடலாம். நமக்குத் தீமை செய்தவரையும் ஏன் வாழ்த்த வேண்டும் என்றால், "அவர் அறியாமையினாலே தான் அவ்வாறு செய்தார், நம்முடைய கர்மச் சுமையின் விளைவு அவரைத் தீமை செய்ய இயக்கியது, எனவே அவர் செய்தார், அவருக்கு உள்ளாக இயங்கிக் கொண்டிருப்பதும் எல்லாம்வல்ல முழுமுதற் பொருளே.

         எனவே, அவரை மனதார வாழ்த்தி எனது தீய பதிவு ஒன்றை அகற்ற உதவிய அவருக்கு நன்றியும் செலுத்துவேன்" என்ற தத்துவ விளக்கம் நம் செயலுக்கு வந்து இயல்பாகி விட்டதென்றால், நாம் ஆன்மீகப் பாதையில் திடமாக முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்.


 

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

உடலும் உயிரும் இசைந்து வணங்கி இயங்கும் நிலையில் இணைக்கப் பெற்று வாழ்ந்து வருபவன் மனிதன். அற்புதமான தொகுப்பாக உள்ள உடல் அமைப்பு, வியத்தகு ஆற்றல்களை உள்ளடக்கமாகக் கொண்ட உயிர்ச்சக்தி, குறுகியும், விரிந்தும், நுணுகியும் இயங்கத் தக்க அறிவுத் திறன் இவை இலட்சக்கணக்கான ஆண்டுகளாகக் கருமூலம் பிறவித் தொடராக மேலும் மேலும் சிறந்து மிகவும் உயர்ந்த நிலையை எய்தியுள்ளன.




ஒரு உயர்ந்த குறிக்கோளோடு மனித உயிர்கள் இவ்வுலகுக்கு வந்துள்ளன. மன உணர்வை விரிந்த அளவில் வளர்த்துக் கொள்ளவும், அறிவில் முழுமை பெற்று இயற்கையை உணர்ந்து, ரசித்து அதனோடு ஒன்றி வாழ்ந்து நிறைவு பெறும் நிலையான அமைதியைப் பெறவும் உள் நோக்கமாக அமைந்துள்ளதே மனித உயிர்.


அறிவின் உயர்வு பெற்று உயிரின் மதிப்பும் சிறப்பும் உணர்ந்து நிறைவு பெறுவதே மனிதப் பிறவியின் நோக்கமெனினும், அது வெற்றி பெற உடலை நலமோடும் வளமோடும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.




-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

அன்பு உலகம்

by thirukumaran | Friday, December 17, 2010 | In by 1 COMMENT

பூட்டு இல்லாத பீரோ,
தாழ்ப்பாள் அற்ற கதவு,
விளக்குப் போடாத வீதி,
போலீஸ் இல்லாத சமூகம்,
சட்டம் இயற்றாத ஆட்சிக் குழு,
ராணுவம் அற்ற நாடு,
அணுகுண்டு இல்லாத உலகம்,
பிரிவினை கொள்ளாத பக்தன்,
போட்டியிடாத வியாபாரிகள்,
பொறாமைப்படாத பெண்கள்,
காமம் களைந்த ஆண்கள்,
பாசவலை பின்னாத குடும்பம்,
அகந்தை அற்ற மனிதன்,
அடடா.......இந்த அன்பு உலகம்......
அனைவரும் பகிர்ந்துகொள்ளத் துடிக்கும் இந்த ஆனந்தப்பூங்கா,
அன்பில் விளைந்த அமிர்த யுகம்.
நண்பர்களே!
இது இன்றும் சாத்தியம்!
இங்கு இப்போதே சாத்தியம்!
இதற்கு தேவையெல்லாம் இதுதான்,
இதயத்தை மலர விடுங்கள்!

                                                                                               நன்றி osho-tamil.com

“எண்ணமே இயற்கையதன் சிகரமாகும்


இயற்கையே எண்ணத்தில் அடங்கிப் போகும்


எண்ணத்தின் நிலைகாட்ட முடிவதில்லை


இல்லை என்று சொல்லவும் யாரும் இல்லை


எண்ணம் எழும் இடமோ ஓர் புள்ளியாகும்


இயங்கி முடியும் அளவோ அகண்டாகாரம்


எண்ணமே செயற்கைக் கருவிகளான அனைத் தினோடு


இயற்கைக் கருவிகளை யெலாம் இயக்கும் சக்தி”

ஒரு காலியான பாத்திரத்தை நிமிர்த்தித் தண்ணீருக்குள் அழுத்த அதில் நீர் நிறைந்து விடும். பின்னர் அதை விட்டு விட்டால், அது நீரில் முழுகி மறைந்து போகும். அதுபோலவே பார்த்தல், கேட்டல், முகர்தல், ஊறு உணர்தல், சுவைத்தல் ஆகிய ஐயுணர்வுகளில் செயலாற்றப் பழகி விட்ட அறிவானது உணர்ச்சி நிலை எய்தி, உணர்ச்சி மயமாகி, தன் உண்மை நிலையினை இழந்து விடுகிறது.



அதே பாத்திரத்தைத் தலைகீழாய்த் தண்ணீருக்குள் அழுத்திப் பிடித்தால், அதில் நிறைந்திருக்கும் காற்றானது வெளியே போகாமல் நிலைத்து நிற்பதால், அப்பாத்திரத்தினுள் நீர் நுழையாது. அப்பாத்திரம் தலைகீழான நிலையில், நீர் நுழைய இடம் தராமல், மிதந்து கொண்டே இருக்கும்.


அதே போல் தன் ஆதிநிலையறிந்து அகண்டாகாரத்தில் விழிப்புடன் இருக்கும் அறிவு, புலன்களின் மூலம் செயலாற்றிய போதிலும் அகண்ட ஞாபக வேகத்துடன் இருப்பதல்லாமல் புலனியக்க வேலை முடிந்தவுடன் தன்னிலைக்கு, விரிந்த எல்லைக்கு, வந்து நிலைத்திருக்கும்.





-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி