வாழ்க வளமுடன்

பிறப்பினிலைமை.

by thirukumaran | Saturday, September 11, 2010 | In by 1 COMMENT

ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத்
தோதிய நூலின் பயன்.
(1)
பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு.
(2)
ஓசைபரிச முருவஞ் சுவை நாற்றம்
ஆசை படுத்து மளறு.
(3)
தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்
உருவத்தா லாய பயன்.
(4)
நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே
உலவையிரண் டொன்று விண்.
(5)
மாயன் பிரம னுருத்திரன் மகேசனோ
டாயுஞ் சிவமூர்த்தி யைந்து.
(6)
மாலய னங்கி யிரவிமதி யுமையோ
டேலுந் திகழ்சத்தி யாறு.
(7)
தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சுக்கிலந் தாதுக ளேழு.
(8)
மண்ணொடு நீரங்கி மதியொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு.
(9)
இவையெல்லாங் கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்லா மானது விந்து.
(10)


--ஔவையார்

1 Response to "பிறப்பினிலைமை."

  1. gravatar நிகழ்காலத்தில்... Says:

    feedburner அக்கவுண்ட் மூலம் தேவைப்படுவோர் பதிவு செய்து மின்னஞ்சல் வழியாக இடுகைகளைப் பெற வசதி ஏற்படுத்தலாமே..

    பலரையும், தவறாது அனைத்து இடுகைகளும் சென்று சேருமே

    வாழ்க வளமுடன்
    நிகழ்காலத்தில் சிவா