வாழ்க வளமுடன்

ஒரு காலியான பாத்திரத்தை நிமிர்த்தித் தண்ணீருக்குள் அழுத்த அதில் நீர் நிறைந்து விடும். பின்னர் அதை விட்டு விட்டால், அது நீரில் முழுகி மறைந்து போகும். அதுபோலவே பார்த்தல், கேட்டல், முகர்தல், ஊறு உணர்தல், சுவைத்தல் ஆகிய ஐயுணர்வுகளில் செயலாற்றப் பழகி விட்ட அறிவானது உணர்ச்சி நிலை எய்தி, உணர்ச்சி மயமாகி, தன் உண்மை நிலையினை இழந்து விடுகிறது.



அதே பாத்திரத்தைத் தலைகீழாய்த் தண்ணீருக்குள் அழுத்திப் பிடித்தால், அதில் நிறைந்திருக்கும் காற்றானது வெளியே போகாமல் நிலைத்து நிற்பதால், அப்பாத்திரத்தினுள் நீர் நுழையாது. அப்பாத்திரம் தலைகீழான நிலையில், நீர் நுழைய இடம் தராமல், மிதந்து கொண்டே இருக்கும்.


அதே போல் தன் ஆதிநிலையறிந்து அகண்டாகாரத்தில் விழிப்புடன் இருக்கும் அறிவு, புலன்களின் மூலம் செயலாற்றிய போதிலும் அகண்ட ஞாபக வேகத்துடன் இருப்பதல்லாமல் புலனியக்க வேலை முடிந்தவுடன் தன்னிலைக்கு, விரிந்த எல்லைக்கு, வந்து நிலைத்திருக்கும்.





-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

1 Response to "அறிவறிந்தோர் ஞாபகம்"

  1. gravatar Astrologer Bhairav Says:

    Pandit Bhairav Ji, a Famous Indian Astrologer in New York has become a dependable name in the field of astrology.
    Astrologer in USA