வாழ்க வளமுடன்

* மனம் தான் மனிதவாழ்வின் விளைநிலம். அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான். இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் மனம்தான்.

* அன்றாடம் மனம் பலவிதமான விஷயங்களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது. குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மேம்பாடு அடையும்.

* வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே. அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது. அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது.

* கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது. இன்னும் சொல்லப்போனால் கவலையின்போது பிரச்னை மேலும் பெரிதாகிவிடும்.

* தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது. தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம். திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை. அதற்கான சரியான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்.

- வேதாத்திரி மகரிஷி

1 Response to "வருந்தாதே மனமே!"

  1. gravatar CS. Mohan Kumar Says:

    அற்புதம். கணக்கு பாடத்தில் வரும் அத்தனை கணக்குகளுக்கும் தீர்வு இருப்பது போல் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் முடிவு / தீர்வு உண்டு.

    Every problem has a solution, In fact more than one solution.

    நல்ல விளக்கங்கள். நன்றி