தவம்
by thirukumaran | Saturday, October 23, 2010 | In by மகரிஷியின் சிந்தனைகள் | NO COMMENTS
இப்போது, இங்கே நாம் அமர்ந்திருக்கிறோம். நம் மனம் எங்கேயோ ஓடுகின்றதென்றால், நாம் எண்ணியது தான் அது. எதை ஏற்கனவே எண்ணி எண்ணி நம் எண்ணத்தை அதிகமாகச் செலவு செய்தோமோ, அதற்கே நமது மன அலைகளை ஆக்கி வைத்திருக்கிறோம். அதனால், நாம் ஒடுங்கி நிற்கிற போது அதற்கு ஒத்துவராமல் அலை நீளம் முன்னர் இயங்கி இயங்கி எங்கே கொண்டு வந்து வைத்தோமோ, அங்கே உற்பத்தியாகிறபோது, அதுவே இயக்கமாகிறது; அத்தனை செல்களும் உடலிலேயும், மூளையிலேயும் இயங்கி அதுவே இயக்கமாகிறது. அதனால், இதற்கு - இந்தத் தவத்திற்கு - நன்றாகப் பழக வேண்டும். பழகப் பழக மனம் தன்னுள்ளேயே ஒரு தன்மையை (Character) ஏற்படுத்திக் கொள்ளும்.
எந்தத் தொழிலைச் செய்யும் போதானாலும் சரி, துரியத்தில் மனத்தை வைத்துப் பழகி வரலாம்.
"கருதவத்தில் ஆரம்ப சாதகர்கள்
கர்ம ஞானக் கருவிகளை இயக்கும்போதும்
புருவமத்தி நினைவாக இருக்க வேண்டும்
புலன்கள் தமை இவ்வழியே பழக்கிக் கொண்டா..."
(ஞானமும் வாழ்வும்)
"படிக்கும் போது தவம் செய்யலாமா; இரவில் செய்யவாமா?" என்றெல்லாம் கேட்பார்கள். தவத்திற்குக் காலமும் வேண்டியதில்லை; திசையும் வேண்டியதில்லை. அறிவை, விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு பயிற்சி தான் தவம். அதற்குக் கால நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தக் காலத்திலேயும் செய்யலாம். இதையெல்லாம் உணர்ந்து, நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம் செய்து வருகிறீர்களோ, அந்த அளவுக்கு, விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை அறுத்துக் கொள்ளவும், தெளிந்த நிலையிலே அந்தச் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளவும், சிக்கல் வராமல் காத்துக் கொள்ளவும் வேண்டிய விழிப்பு நிலையை இந்தத் தவம் உங்களுக்குக் கொடுக்கும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No Responses to "தவம்"
Post a Comment