ஆதியே அனைத்தும்
by thirukumaran | Friday, October 15, 2010 | In by மகரிஷியின் சிந்தனைகள் | NO COMMENTS
இந்த அகண்டாகாரமாக உள்ள பிரபஞ்சத்தை நினைவில் கொள்வோம். தோற்றங்களாகவுள்ள எல்லாவற்றையும் கழித்து அவற்றின் மூலப் பொருளாகவுள்ள ஆகாசத்தை (Ethereal Particle) நினைத்துக் கொள்வோம். நுண்ணிய இயக்கத்துகள்கள் முதல் கொண்டு பெரும் பெரும் நட்சத்திரங்கள் வரையில் ஒவ்வொன்றிலும் (1) தன்னியக்கச் சுழல் விரைவு (Self rotative force) (2) ஒன்றால் மற்றொன்று தூண்டப் பெற்றுத் தொடரியக்கம் (Chain action) (3) மோதுதலிுருந்து எழும் பிரதிபலிப்பு (Reflex action) (4) அவ்வவதற்கேற்ற விளைவுகள் (Results) என்று நான்கு வகையான இயக்கங்கள் நடைபெறுவதை உணருவோம். ஆகாசம் என்னும் நுண்துகள்கள் தான் விஞ்ஞானிகளால் Ethereal Particle அல்லது Electron என்று சொல்லப்படுகிறது. அது இயங்கும் இடத்திற்கேற்ப, அது பெறும் மாற்றம், சிறப்பு இவைகளிலிருந்து மின் அணு (Electron), கரு அணு (Neutron), துணைக்கரு அணு (Proton) எனப் பேசப்படுகிறது.
உதாரணமாக, ஒரு குடும்பத்தில் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் உள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆண்களில் ஒருவரைப் பேரன் என்றும், மற்றவரைத் தந்தை என்றும், மூன்றாமவரைத் தாத்தா என்றும் சொல்கிறோம். அதே போன்று பெண் வரிசையில் பேத்தி, அன்னை, பாட்டி என்று கூறுகிறோம். ஒப்பிட்டு நோக்கும் போது ஒன்றுக்கும், மற்றொன்றுக்கும் இடையே பரிணாமத்தால் உள்ள வேறுபாடு, உறவு, சிறப்பு இவைகளைக் கொண்டு தான் பெயர்கள் வேறு வேறாகக் கொடுக்கிறோம். மனிதன் என்ற நிலையில் எல்லோரும் ஒன்றே. இதுபோன்றே ஆகாசமெனும் பரமாணு, பரிணாமத்தால் அடைந்த பல்வேறு தன்மைகளை ஒப்பிட்டு நோக்கும் அறிவு, பெயர்களைப் பலவாக ஆக்குகிறது. இது பிரித்து உணர்வதற்கு எளிதாக உள்ளது.
இந்தப் பகுத்துணரும் ஒப்புவமை நோக்கு (Relative Concept) புலன்களால் விளைந்த சிறப்பாகும். புலன்களைக் கடந்து நிற்கும் திறன் பெற்ற ஆறாவது அறிவு இவை அனைத்தையும் தொகுத்துணரும்போது பெறப்படும் உண்மை எல்லாமே ஒரு பொருள் என்பதாகும். அதுவே பொருள் நிலையில் ஒன்றாகவும், நிகழ்ச்சி நிலையில் வேறுவேறாகவும் உணரப் பெறுகின்றது என்பது விளங்கும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No Responses to "ஆதியே அனைத்தும்"
Post a Comment