வாழ்க வளமுடன்

சிந்தனைகள்

by thirukumaran | Saturday, October 9, 2010 | In by NO COMMENTS

ஒரு மனிதனுடைய மகிழ்ச்சியும், துயரமும் அவன் எந்த அளவுக்கு சினத்தை தவிர்ப்பவனாக இருக்கிறான் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

ஒருவனுடைய சூழ்நிலை எவ்வளவு அதிர்ஷ்டவசமானதாக இருப்பினும் சினத்தை அவன் தவிர்க்கவில்லையானால் முழுமையான துயரத்திற்கு ஆளானவனாகவே அவன் இருப்பான்.

ஒருவனுடைய அறிவின் முதிர்ச்சியை எந்த அளவுக்கு சினம் தவிர்ப்பவனாக இருக்கிறான் என்பதை வைத்துக் கணிக்கலாம்.

தொல்லைகள் நிரம்பிய இந்த உலகத்தில் அமைதியும் சமாதானமும் காண துணிச்சலும் நம்பிக்கையும்தான் தேவை.

ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் நீங்கள் செய்கின்ற முயற்சியின் உத்வேகமும் இருக்கும்.

‘நாம் இப்போது எப்படி இருக்கிறோம் என்பது, இதற்கு முன்  நாம் என்ன சிந்தித்தோம் என்பதைப் பொறுத்தது’ என்கிறார் புத்தர்.

நாம் எதைச் சிந்திக்கிறோம் என்பதோடு, நாம் எதை ஆழமாக நம்பிச் சிந்திக்கிறோமோ அது நம்முடைய வளர்ச்சியில் அதிகமாகப் பிரதிபலிக்கிறது.

மனம் எதை ஆழமாக நம்புகிறதோ அதைத்தான் மனிதன் சாதிக்கிறான்.

தொழிலில் வெற்றியும், தோல்வியும் மனதின் திறமையால் நிர்ணயிக்கப்படுவதில்லை. மனப்பான்மையினால் தான் நிர்ணயிக்கப்படுகிறது.

வெற்றியைச் சிந்தியுங்கள். வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள். வெற்றியை உருவாக்குவதற்குத் தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும். 

No Responses to "சிந்தனைகள்"