வாழ்க வளமுடன்

நீங்கள் கடையில் தேங்காய் வாங்குகிறீர்கள்; தேங்காய்க்குள் தண்ணீர் இருக்கிறது. நீங்கள் ஒரு எலுமிச்சம்பழம் வாங்குகிறீர்கள்; அதற்குள்ளும் நீர் இருக்கிறது, அதை ஜூஸ் (Juice) என்கிறோம். இதே போல எந்த இடத்தில் நீர் இருந்தாலும் அது நமக்குத் தேவைப்படுவதாகவே உள்ளது. சில இலைகளில் கூட நீர் இருக்கிறது; கசக்கிப் பிழிந்து அதை உபயோகப்படுத்துகிறோம். ஒவ்வொன்றிலிருந்து கிடைக்கும் நீருக்கும், தனித்தனிப் பெயர்களைக் கொடுத்து அவற்றை உபயோகப் படுத்துகிறோம்.

       இந்த நீரின் மூலம் என்ன?  தேங்காய்க்குள் எப்படித் தண்ணீர் வந்தது?  நிலத்திலிருந்து தானே?  அப்படியானால் நிலத்திற்கு, பூமிக்கு எப்படித் தண்ணீர் வந்தது?  மழையிலிருந்து வந்தது, மழை எப்படி நூரைப் பெற்றது?  கடலிலிருந்து, கடல்நீர் ஆவியாகி மேகமாக மாறுவதால் வந்தது.

       இதே தத்துவம் தான் எலுமிச்சம் பழத்திலுள்ள நீருக்கும், இலைகளில் உள்ள நீருக்கும் ஏற்றது. தேங்காய்க்குள்ளும் எலுமிச்சம் பழத்திற்குள்ளும், இலைகளுக்குள்ளும், எல்லாவற்றிலும் கடல் நீரைத் தானே காண்கிறோம்?  இதுதான் அத்வைதம்.

        பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களையெல்லாம் மறந்து விடாமல் மூலத்தைப் பார்க்க வேண்டும்.
 
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "அத்வைதம் த்வைதம்"