சிந்தனை
by thirukumaran | Sunday, September 12, 2010 | In by மகரிஷியின் சிந்தனைகள் | NO COMMENTS
சிந்தனை செய்வது அவசியம் தானா; அது வேவை தானா; அப்படியென்றால் எப்படி அதைச் செய்ய வேண்டும்?" என்றால் அது மிகமிக அவசியம்; தேவை. அளவு முறை கண்டு வாழத் தெரிந்து கொண்டோமேயானால், உலகமே அமைதி நிலைக்கு வந்துவிடும். இந்தத் தத்துவம் கடினமானதே அன்று. முனைந்து பயின்றால் இயல்பாகிப் போகும். ஏற்கனவே, உள்ள பழக்கப் பதிவுகளின் காரணமாகத் தொடக்கத்தில் கடினம் போலத் தோன்றும் - மோட்டார் சைக்கிளை Start செய்வது போல, வண்டி ஓடத் தொடங்கி விட்டது என்று சொன்னால், balance தானாக வந்து விடும்.
நாம் சிந்தனை செய்து கொண்டே இருக்கும் பொழுது, அந்தச் சிந்தனையில் தவறு வந்தால் அதைத் திருத்துவதற்குத் தயாராக இருக்க வேண்டும். சிந்தனையே இல்லாமல் வாழ்வது மிதந்து கொண்டிருப்பதற்கு ஈடாகும். வெள்ளம் வந்தால் நம்மை அடித்துக் கொண்டு போகும்; அவ்வளவு தான்; நாம் எங்கே போகின்றோம் என்று தெரியாது; எதைப் பிடிக்கவேண்டும் என்று தெரியாது. இந்த நிலையிலிருந்து மாறி நல்ல வெற்றிகரமான வாழ்க்கை வேண்டும் என்றால் சிந்தனை செய்ய இன்றே, இப்பொழுதே தொடங்க வேண்டும்.
No Responses to "சிந்தனை"
Post a Comment