உலகமே ஒரு கலா சாலை
by thirukumaran | Wednesday, September 22, 2010 | In by மகரிஷியின் சிந்தனைகள் | 1 COMMENT
உலகமே ஒரு பழைய பள்ளிக்கூடம்
ஒவ்வொருவருக்கும் அன்றாட வாழ்வில்
பல புதிய பாடம் சூழ் நிலைகட் கேற்ப
பலாத் காரமாகப் போதிக்கும், என்றும்
நலம் விரும்பும் அறிஞர் பலர் செய்யும் போதம்
நல் வாழ்வில் அவர்கள் சந்தித் தாராய்ந்த
சில முக்கிய நிகழ்ச்சிகளின் விளக்கமாகும்
சிந்தனையைச் செயல் திறனை ஒழுங்கு செய்யும்.
இந்த உலகம் ஒரு பழமையானதும், பெரியதுமான கலாசாலையாகும். சூழ்நிலைகளுக்கேற்றபடி உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் தினந்தோறும் புதிய புதிய பாடங்கள் பலாத்காரமாகப் போதிக்கப்படுகின்றன. இந்தப் படிப்பை யாராலும் ஒதுக்கிவிட முடியாது. சமூக நலமே குறிக் கோளாகக் கொண்டு வாழும் அறிஞர்கள் அவ்வப்போது பல விதத்தில் மக்களுக்கு நற்பயன் விளைவிக்கும் சன்மார்க்கங்களையும், வாழ்க்கை அனுபவ நுட்பங்களையும் போதனை செய்து வருகிறார்கள்.
அவர்கள் வாழ்வில் சந்தித்த முக்கிய நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து, இன்ப துன்ப விளைவறிந்து வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறார்கள். இந்தப் போதனைகள் அனைத்தும் மக்களின் சிந்தனையை உயர்த்திச் செயல் திறமையை ஊட்டி வாழ்வை ஒழுங்குபடுத்தி வளப்படுத்துவனவாம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
September 22, 2010 at 7:29 AM
அருமையான் மக்கள் தொண்டு செய்கிறீர்கள் நண்பா!
மகரிஷியின் அனைத்து கருத்துக்களும் மக்களிடம் சென்று சேரவேண்டும் என்று நீங்கள் காட்டும் ஆர்வம் என்னை பிரமிக்கவைக்கிறது.
உங்களோட சேவை, அதற்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள், உழைப்பு, என்னை பிரமிக்க வைக்கிறது. அதிகமான உழைப்பைக் கொடுக்கிறீர்கள்.
மக்களுக்கு பயன்படும் நல்ல கருத்துக்களை சொல்லி வருகிறீர்கள்! மகரிஷியின் கருத்துக்கள் எல்லோரும் பின்பற்றும் காலம் சீக்கிரம் வரும்.
நானும் ஆன்மீகத்தோடு, இயற்கை மருத்துவத்தினை கலந்து எழுதி வருகிறேன். நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள் நண்பரே