மகரிஷி அவர்களின் கவிகளும், பொருளும்
by thirukumaran | Monday, September 6, 2010 | In by ஞானக் களஞ்சியம் | NO COMMENTS
கவி:
நன்றாக பத்மாசனத்தில் ஆழ்ந்து
நாள்போக்கத் தூங்கிவிடப் பழகிக் கொண்டு
அன்றாடத் தேவைக்குப் பழம், பால், காய்கள்
ஆகார மாயுண்டு அறிவைப் பற்றி
என்றேனும் எவரேனும் கேள்வி கேட்க
இடமின்றி மௌனம் என்று இருந்தீர் போதும்
இன்றேனும் விழிப்படைந்து எழுந்து வாரீர்
ஈசன்நிலை எளிதாக உணர்த்துகின்றோம்.
பொருள்:
இறையுணர்வைப்பற்றி புரியாமல், பத்மாசனத்தில் அமர்ந்து,
அந்நிலையிலேயே தூங்கிவிடுவதற்குப் பழகி,காலத்தை கழித்து,
பழம், பால், காய்கள் ஆகியவற்றை ஆகாரமாய் உண்டு,
யாராவது கேள்வி கேட்பதற்கு இடம் கொடுக்காமல்,
மௌன சாமியார் என்று மௌனமாக இருந்தது போதும்,
இறைநிலையை எளிதாக உணர்வதற்கு, தூக்கத்தில் இருந்து விழிப்படையுங்கள்.எளிய முறையிலே உயிரை,மனதை, அவற்றிற்கு மூலமான இறையை உணர வாருங்கள்.
No Responses to "மகரிஷி அவர்களின் கவிகளும், பொருளும்"
Post a Comment