அறிந்தது சிவம்,மலர்ந்தது அன்பு
by thirukumaran | Monday, September 20, 2010 | In by மகரிஷியின் சிந்தனைகள் | 1 COMMENT
இறைவனிடம் ஏதோ பெற வேண்டும் என்று நினைக்கிறபோது அது உணர்வு தான் - அவனே தான் இந்த நிலையிலே சிக்கிக் கொண்டு அந்தந்த இடத்துக்குத் தக்கவாறு இன்பத்தையும் அனுபவிக்கிறான்; துன்பமும் அடைகிறான். அந்த இடத்தில் நான் அந்தத் துன்பத்தை நீக்க வேண்டும் என்ற கருணையானது உள்ளத்திலே எழுமேயானால் அதுதான் உறவு.
அந்த உறவை, உண்மையான உறவை, அவனோடு கொண்ட போது அதிலிருந்து அறம் எப்படி உண்டாகிறது? சேவையாக உண்டாகிறது. அப்பொழுது, அறிந்தது சிவம். இங்கே என்ன? காட்டுவது அன்பு. சிவம் என்ற ஒரு நிலையை அறிவு உணர்ந்தது; அது செயல்படும்போது அன்பாக மலர்ந்தது.
அப்பொழுது அன்பு என்பது என்ன என்று பார்க்கும்போது சிவத்தின் செயலே; பூரணமாக சிவத்தின் செயலே. செயலிலே விளைவாக எப்பொழுதும் வந்து கொண்டிருப்பது சிவத்தின் செயல். ஆகவே, நல்ல செயலையே செய்வேன் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து மதித்து அந்த உறவு கொண்டு கடமையாற்றி வருவது - அதுவே சிவயோகம், எப்பொழுதுமே சிவயோகம் தான்.
எந்தப் பொருளிலேயும் அவனைக் காணலாம்; எந்த நிலையிலேயும் அவனைக் காணலாம்; அவனாகவே இருக்கலாம். உடலால் வேறுபட்டு இருந்தாலும் உள்ளத்தால், அறிவால், ஒன்றுபட்டு இருப்பதை உணரலாம். இந்த நிலைக்கு அறிவை உயர்த்தவல்லது, அறத்தை உணர்த்தவல்லது தவமும், அகத்தாய்வும்; அந்த தவமும் அகத்தாய்வும் நீங்கள் பெற்று விட்டீர்கள், செய்து கொண்டு வருகிறீர்கள், அதனுடைய பலனை உணர்ந்து கொண்டும் இருக்கிறீர்கள். அதனை ஆழமாக மேலும் ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுத்தி பயனடையுங்கள். நீங்களும் பயனடைந்து மற்றவர்களுக்கும் அந்தப் பயன் வீசட்டும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
September 20, 2010 at 7:33 AM
மகரிஷியோட கருத்துக்களை அழகா சொல்றீங்க. எனக்கு அவருடைய கருத்துக்கள் அதிகமா பிடிக்கும். அவைகளின் தாக்கத்தினால் நான் ஒரு நல்ல மனிதனாக மாறிக் கொண்டிருக்கின்றேன்.
நான் புதியதாக பதிவுலகத்தில் நுழைந்து, ஆன்மீக சிந்தனைகளை, இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம் பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன் நண்பரே!
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எனது வலைப்பக்கத்திற்கு வருகை தாருங்கள் நண்பரே! நன்றி!