இல்லறமும் துறவறமும்
by thirukumaran | Tuesday, September 7, 2010 | In by ஞானக் களஞ்சியம் | NO COMMENTS
இல்லறமும் துறவறமும் வேறுவேறாய்
இதுவரையில் கருதி வந்தார் உலகமக்கள்
இல்லறத்தில் வழுவாது கடமையாற்றி
எண்ணத்தை பண்படுத்தி எனையறிந்தேன்
இல்லறமே கடமைகளின் தொகுப்பு என்றும்
இன்பம் துன்பம் உடலுயிர் தத்துவம் உணர்ந்து
இல்லறத்தை திறமையுடன் நடத்த ஏற்ற
எண்ண நிலை துறவறம் என்றும் உணர்ந்தேன் .
இல்லறத்தில் மெய்ஞானம் விளங்கி வாழ
இயலாத காலமொன்று இருந்ததுண்டு
இல்லறத்தை விட்டு பலர் துறவை நாடி
எங்கெங்கோ சுற்றி அலைந்தார் அந்நாளில்
இல்லறத்தில் கடமை செய்தே தவம் பயின்று
இறை நிலையை அறியும் முறை கண்டுகொண்டோம்
இல்லறமும் துறவறமும் ஒன்று சேர்ந்து
இணைந்த உயர் ஆறாம் கண்டோம் மகிழ்ச்சி பெற்றோம்..
No Responses to "இல்லறமும் துறவறமும்"
Post a Comment