மன உறுதி
by thirukumaran | Saturday, September 18, 2010 | In by மகரிஷியின் சிந்தனைகள் | 2 COMMENTS
ஏன் நாம் இயற்கையை உணர்ந்து கொள்ளவும், வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து கொள்ளவும் முடியாமல் தடுமாறுகிறோம்? ஏன் அமைதியான, சீரான வாழ்வைப் பெற முடியாமல் அல்லலுறுகிறோம்? ஏன் இந்த நிலை என ஆய்ந்து பார்க்க வேண்டும்.
உதாரணத்திற்கு ஒன்று சொல்வேன், நீங்கள் ஒரு பையை எடுத்துக் கொண்டு நல்ல காய்கறி வாங்குவதற்காகக் கடைத் தெருவுக்கு புறப்பட்டுப் போகிறீர்கள். போகும் வழியில் விதவிதமாக பூக்களும், பழங்களும் உங்கள் கண்ணில் படுகின்றன, அவற்றை வாங்கிப் பையை நிரப்பிக் கொள்கிறீர்கள்.
பின்னர் கடைத்தெருவுக்குப் போய்க் காய்கறி வாங்கிய பிறகு பார்த்தால், அவற்றை வைக்கப் பையில் இடமில்லை. பையில்தான் ஏற்கனவே நிரப்பி விட்டீர்களே! இப்போது உங்கள் பிரச்சினை என்ன? ஏற்கனவே பையில் உள்ளவற்றை வெளியே கொட்டிவிட்டு, எதை வாங்குவதற்காக கடைத் தெருவுக்கு வந்தீர்களோ, அந்தக் காய்கறியை வாங்கிப் போட்டுக் கொள்வதா? அல்லது, காய்கறியே வாங்காமல் ஏற்கனவே வழியில் வரும்போது பையில் நிரப்பிக் கொண்டு வந்தவற்றுடன் வீடு திரும்புவதா? கடைத் தெருவுக்குப் புறப்படும் பொழுதே காய்கறி தான் வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டும் என்ற உறுதி வேண்டும்.
ஒவ்வொரு வகையிலும் அத்தகைய மன உறுதியைப் பெற்று இறைநிலை உணர்ந்து, உண்மை நெறியில் அறிவறிந்து வாழ்வது தான் தவம் (Yoga).

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
September 19, 2010 at 7:14 AM
இப்போது தான் வலைசரத்தைப் பார்த்துவிட்டு உங்களின் வலைப்பக்கத்திற்கு வருகிறேன். மகரிஷியின் கருத்துக்கள் எல்லாம் மனிதரிகளுக்கு மிகவும் பயனுள்ளவை!
உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி! உங்களின் சேவை தொடரட்டும் என்று மனமாற வாழ்த்துகின்றேன் நண்பரே!
September 19, 2010 at 10:42 AM
தங்களின் வலை பக்கத்தை தொடர்ந்து வாசிக்கிறேன்
வலை சரத்தில் இன்று உங்களின் இந்த பதிவு குறித்து எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்
http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_19.html