வாழ்க வளமுடன்

ஒவ்வொருவரும் இவ்வுலக மீது பிறக்கிறோம். மனித இனம் வாழ்ந்துகண்ட அனுபவம், வாழும் மக்களின் கூட்டுறவு, இவைகளின் துணையையும் பயனையும் கொண்டு வாழ்கிறோம்; இன்ப துன்பம் அடைகிறோம்; பின்னர் இறந்து விடுகிறோம்.

      இந்த நியதி எல்லோருக்கும் பொது. இந்த உண்மையை மறக்காது, விழிப்புடன் இருக்கும் அறிவின் பண்பாட்டுடன், அறிவையும் உடலையும் பண்படுத்தி - பயன்படுத்தி - உலக வாழ்க்கையைச் சிறந்த முறையில் அனுபவிப்பதற, இயற்கைக்குப் பொருத்தமான வாழ்க்கை முறையை வகுத்துப் பூரண அமைதி பெற முயற்சி செய்வோம்.

      மனிதனின் வாழ்க்கைக் தத்துவத்தை அறிந்து, பிறப்பு இறப்பு இடையே, அறிவியக்கக் காலத்தில் மட்டும் ஏற்படும் இன்ப துன்பத் தோற்றம், மாற்றம் என்ற மாறுபாடுகளையும் மனதில் கொண்டு, அமைதியாக வாழத் திட்டங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைவு படுத்துகிறோம்.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "உண்மை நிகழ்ச்சிகள் (The True events)"