வாழ்க வளமுடன்

நான் உலகம் முழுவதும் சென்று பல நாட்டு மக்களைக் கண்டிருக்கிறேன். பல நாட்டுப் பெண்மணிகளை நான் கண்டு அவர்களுடைய பண்பாட்டினுடைய அடிப்படை எல்லாம் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். ஏனென்றால், எனக்குப் பண்பாட்டின் மேல் அதிகமாகப் பற்றுதல் உண்டு.

        பண்பாடு என்றால் என்ன?  இந்த உலகம் தோன்றி ஆரம்ப காலத்தில் ஆதி மனிதன் (Primitive man) என்று சொல்வார்களே, அந்த நிலையிலேயிருந்து இன்று வரை பார்ப்போம். எத்தனையோ மாறுதல்கள் மனித சமுதாயத்திலே வந்து இருக்கின்றன.

        அவையெல்லாம் அந்தந்த இடத்திலே, அந்தந்தக் காலத்திலே அங்கங்கு கிடைத்த உணவுப் பொருட்கள், ஆங்காங்கு இருந்த தொழி வசதி, அதைக் கொண்டு உற்பத்திச் சிக்கல்கள், அதனால் ஏற்பட்ட நோய், அதைப் போக்கிக் கொண்ட முறைகள் இவையெல்லாம் ஒவ்வொரு நாட்டிலேயும் தாமாகவே பரிணாமத்தில் Cultural evolution-process என்பதாக வந்து கொண்டே இருக்கும்.

        ஆகவே, ஒரு மனிதன் ஒரு இடத்தில், ஒரு குருவினிடத்தில், ஒரு நாட்டில், ஒரு பண்பாடு இருக்கிறது என்றால் அதை நோக்கிப் பார்த்தோமேயானால் நீணடகாலச் சரித்திரத் தொடராகத் தான் அது இருக்கும். ஆகவே, பண்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

1 Response to "பண்பாடு"

  1. gravatar http://rkguru.blogspot.com/ Says:

    nalla pathivu.......