வாழ்க வளமுடன்

சுவாமிஜி அவர்களே அவனின்றி ஓர் அணுவும் அசையாது; 
அனைத்து இயக்கங்களுக்கும் காரணம் இறைவன்'' என்கிறோம்
அவ்வாறெனில், மனிதன் தவறுகளுக்கு இறைவன்தானே காரணம்?
மனிதனை ஏன் தண்டிக்க வேண்டும்?

    மின் சக்தியால் இயங்கும் விசிறியோ, விளக்கோ பழுதடைந்தால்
மின்சாரத்தைக் குறை கூற முடியாது. பழுதடைந்த பொருளைச்
சீர்செய்ய வேண்டும். அதேபோன்று, மனிதனானவன் இறையாற்றலால்
 இயங்கும் ஒரு கருவியே. இறைவனைக் கண்டுபிடித்து அவனையே
தண்டிப்பது என்பது இயலாத காரியம்.

     ஆனால் அந்த இறைவன் பரிணாமத்தில் எந்த உருவத்தில் வந்து
செயல்களைச் செய்து, அதே பதிவுகளை அவன் கருமையத்துள்ளே
பதிவாகப்பெற்றுத் திரும்ப அதே செயலைச் செய்கின்ற அளவுக்குக்
கூர்தலறமாக (செயலுக்கு - விளைவு) வந்திருக்கின்றதோ, அந்த
கருவியைத்தான் திருத்தவேண்டும். திருத்தம் செய்து சீரமைக்கும்
பேரறிவின் செயலையே தண்டனை என்ற சொல் குறிக்கும்.

      எந்த இடத்தில் இயற்கையினுடைய ஆற்றலுக்கு முரணாகச் செயல்கள்
உண்டாயிற்றோ, எந்தச்செயலில் அல்லது இடத்திலிருந்து தனக்கும்
பிறருக்கும் துன்பம் வருகின்றதோ, அங்கேயே அதை மாற்றி அமைப்பதற்
கான திருத்தம் பெறுவதற்காக, சிந்தனைமிக்க அறிஞர்களால் வகுக்கப்பட்ட
சீர்திருத்தமுறையைத்தான் தண்டனை என்ற பெயரால் திருந்தவேண்டிய
மனிதனுக்குக் கொடுக்கிறார்கள்.

No Responses to "அருள்தந்தையின் பதில்கள்"