வாழ்க வளமுடன்

வாழவேண்டும் என்றெண்ணி மனித னாக

     வந்ததில்லை, எனினும்நாம் பிறந்து விட்டோம்.

வாழவேண்டும் உலகில் ஆயுள் மட்டும்

     வாழ்ந்தவர்கள் அனுபவத்தை தொடர்ந்து பற்றி

வாழவென்ற உரிமை எல்லோர்க்கும் உண்டு
 
     வாழ்வோர்க்குச் சாதகமாய் வாழும் மட்டும்

வாழஉள்ளோர் அனைவருமே ஒன்றுகூடி,

     வகுத்திடுவோம் ஒருதிட்டம் வளமாய் வாழ.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "பிறந்துவிட்டதால் வாழ்ந்தேயாக வேண்டும்"