வாழ்க வளமுடன்

விருப்பு, வெறுப்பு உணர்ச்சிகளில் அதிக வன்மையும், வேகமும் உடைய மனிதன், விலங்குகளைப் போல், காட்டிலும், குகையிலும் வாழ்ந்திருந்த காலம் உண்டு.

       நெருப்பைக் கண்டுபிடித்து, அதை உபயோகிக்கக் கற்றபின், வேக வைத்து ஆகாரம் உண்ணக் கற்றுக் கொண்டான். செயற்கையில் ஒளி ஏற்படுத்திக் கொண்டான். நேற்று இன்று நாளை எனக் கடந்த, நிகழ், எதிர் காலங்களைச் சுட்டும் முன்னேற்றம் அடைந்தான். பொருட்களைச் சேமித்தல், பாதுகாத்தல் என்பனவற்றையும் கற்றுக் கொண்டான்.

      இரும்பையும், மின்சாரத்தையும் கண்டுபிடித்த பின், பல துறைகளிலும் வேகமாக முன்னேறி வாழ்வை வளமாக்கிக் கொண்டான். அறிவு மேலும் உயர்ந்து அணுசக்தியைக் கண்டுபிடித்த பின், வாழ்வில் முன்னேறிக் கொண்டே இருக்கும் பாதையில், ஒரு திருப்பம் வந்திருக்கிறது.

      அதாவது அவன் அடைந்த முன்னேற்றங்கள் யாவும் பயனற்றே போகும் அளவுக்கு அணுசக்தியைத் தவறாக மனித இன வாழ்விற்குப் பாதகமாக உபயோகிக்க ஆரம்பித்து விட்டதால், மனித இனமே அழிந்து விடக்கூடிய அபாயம் தோன்றிவிட்டது.

      இத்தகைய விபரீத விளைவுகளைத் தடுத்து மனித இனத்தைக் காப்பாற்ற எல்லோரும் பெரு முயற்சி கொள்ள வேண்டும்.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "கால வேகம்"