நூற்றாண்டு தந்த மகான்
by thirukumaran | Saturday, August 14, 2010 | In | NO COMMENTS
வான்தொட்ட மகத்துவமே
மன்பதையின் புத்துயிரே
நான் என்ற சிந்தனையை
நல்வழிக்கு மடைமாற்றி
கூன் விழுந்த மனம் போக்கி
கோபுரத்தில் வைத்தவரே
தீனருக்கும் வாழும் வகை
செய்தளித்த தவப்பேறே
தனிமனிதன் ஒழுக்கத்தால்
தளிர்க்கின்ற நற்குடும்பம்
பனிமலையாய் தானுயர்ந்து
பரிமளித்து இப்பாரை
நனிசிறக்க வைக்குமெனும்
நல் வேதாத்திரியம் எனும்
கனியமுதை எமக்கீந்த
கவின் கடலே வணங்குகிறோம்
நூற்றாண்டு கண்ட மகான்
நுவல அரும் தவப்புதல்வன்
காற்றோடு கலந்நாலும்
கவிந்திருப்பீர் எம் மனதில்
போற்றுகிறோம் உம் புனிதம்
புலம் காக்கும் வேள்வியினை
நாற்றெடுத்து உம் கொள்கை
நலம் காக்க யாம் உழைப்போம்
பேரா.தி.ப.அமிர்தலிங்கம், திருப்பூர்
No Responses to "நூற்றாண்டு தந்த மகான்"
Post a Comment