கடமையும் நீதியும்
by thirukumaran | Saturday, July 31, 2010 | In by மகரிஷியின் சிந்தனைகள் | NO COMMENTS
பிறந்தது முதல் இறக்கும் வரைக்கும் வாழ்க்கைக்கு அவசியமான வசதிகள் அனைத்தையும் காலா காலாத்தில் பெற்று அனுபவிக்க எல்லோருக்கும் உற்ற சுதந்திரமே உரிமை எனப்படுகின்றது.
வாழ்க்கைத் தேவைகளைப் பெறவும், அளவு முறையோடு அனுபவிக்கவும், அறியாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும், இயன்றவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் உதவி செய்ய வேண்டியது கடமை எனப்படுகின்றது.
இந்த உரிமையை அனுபவிப்பதிலும் கடமையை நிறைவேற்றுவதிலும், பிறர் உரிமையும் கடமையும் பாதிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ள மனிதன் கண்ட ஒரு ஒழுக்க முறையே நீதி என்று மேன்மையாகக் கருதப்படுகின்றது. இந்த நீதியைப் பாதுகாப்பதற்குச் சமுதாயம் அவ்வப்போது வகுக்கும் கட்டுப்பாடுகளே சட்டங்கள் என மதிக்கப்படுகின்றன.
அந்தச் சட்டங்களை மீறுவது குற்றமெனவும் குற்றமிழைப்பவர்களைத் தடுக்க, திருத்த, தண்டிக்க, பாதுகாக்க எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் தண்டனை என்றும் வழங்கப்படுகின்றன.
இவையெல்லாம் வாழ்க்கைத் தத்துவத்தை ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கும் சிந்தனையாளர் காணும் விளக்கங்களாகும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No Responses to "கடமையும் நீதியும்"
Post a Comment