அறிஞர் போதனைகள்
by thirukumaran | Sunday, July 18, 2010 | In by வாழ்க்கை மலர்கள் | NO COMMENTS
சின்ன வயதுக் குழந்தைகளுக்கு உடைகளைத் தைக்கும் போது அவர்களின் வளர்ச்சியை ஞாபகத்தில் கொண்டு தாராளமாகத் தைத்துக் கொள்ளுகிறோம். துணியின் உறுதி அதிகமாக இருந்தால் இந்தத் தாராளம் சற்று அதிகமாக இருக்கும். இதனால், சில உடைகள் தைக்கும் போது பொருத்தமில்லாமலும் தோன்றாலாம். எனினும், போகப்போக அதன் உபயோகம் நீண்ட காலத்திற்குப் பொருத்தமானதாகவே இருக்கும்.
இதுபோன்ற அறிஞர்கள் உலக மக்களுக்குத் தரும் அறநெறிப் போதனைகளும், நல்வாழ்விற்கேற்ற திட்டங்களும் அக்காலத்திற்குச் சிறிது பொருத்தமில்லாமலும், அவசியமற்றவை என எண்ணும்படியாகவும் இருக்கலாம்.
கடந்த கால அனுபவங்கள், எதிர்கால விளைவுகள், தற்காலச் சூழ்நிலைகள் என்ற மூன்றையும் இணைந்து யூகிக்கும் திறனான 'முக்கால ஞானம்' என்ற அகன்ற நோக்கில் அவர்கள் திட்டங்களும், போதனைகளும் உருவாவதால் குறுகிய நோக்கமுள்ள மயக்கவாதிகளும், பாமரர்களும் அக்கருத்துக்களில் அடங்கியிருக்கும் நன்மைகளை உடனே எளிதில் புரிந்து கொள்ள முடியாது. சிறந்த சிந்தனையாளர்களும், நீண்ட எதிர்காலமுமே அத்தகைய அறிஞர்கள் கருத்துக்களைத் தெளிவாக விளக்கம் செய்ய முடியும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No Responses to "அறிஞர் போதனைகள்"
Post a Comment