குடும்ப அமைதிக்கு காயகல்பகலை
by thirukumaran | Monday, September 15, 2008 | In by பயிற்சிகள் | NO COMMENTS
உடல் மற்றும் மனநலனுக்கு முக்கிய பொருளான விந்து நாதங்களின் பெருமையையும் - கற்பு நெறியின் மேன்மையினையும் மனித குலம் உணரவேண்டும் . விந்து நாதத்தை இன்பத்துக்குறியதோர் சாதனமாக மட்டும் இன்றைய மனிதர்கள் கருதுகிறார்கள் . நோயற்றஉடலுக்கும் தெளிந்த அறிவு மேன்மைக்கும் விந்து நாதந்தான் ஆதாரம். மேலும் குடும்ப வாழ்வில் ஆண் , பெண் உறவில் ஒரு இனிமையையும் , ஆழமான நட்பையும், அமைதியையும் மகிழ்வையும் கொடுப்பதுமாகும். எனவே அவற்றைபுனிதப்பொருளாகக் கருதி, அவற்றின் தூய்மையை பராமரித்து அவற்றுக்கு மேன்மையளிக்க வேண்டும். அதற்கு உதவுவது தான் காயல்பக்கலை. உடல் நலமும் மனவளமும் தான் வாழ்வில் வெற்றியையும் அமைதியையும் நிறைவையும் அளிக்குமென்றால் அதற்கு முக்கியமான ஆதாரமான உயிர் ஆற்றல் அதை நாம் காயகல்பத்தால் பெறலாம்.
எந்த அளவுக்கு இளைஞர்கள் காயகல்பத்தின் மூலம் உடல் நலமும் அறிவு உயர்வும் பெறுகிறார்களோ, அந்த அளவுக்குத்தான் அவர்ளின் எதிர்கால குடும்பமும் வாழ்க்கையில் இனிமையும் அமைதியும் நிலவமுடியும்.
மேலும் வாலிபவயதிலேயே ஆண், பெண் இருவரும் காயகல்ப பயிற்சி எடுத்துக்கொண்டு வந்தால் விந்து நாதத்தால் உள்ள குறைகள் அகன்று விந்து நாதம் சுத்தப்படும். அவர்கள் திருமணம் செய்து கொண்ட பின் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை உடல் நலம் மனவளம் மிக்கதாகவும் அறிவுக்கூற்மையுடையதாகவும், ஆன்மீக எண்ணம் கொண்டதாகவும் இருக்கும். இதைத்தான் கருவிலே திருவுடையார் (குழந்தை) ஆதல் என்ன்பார்கள். அப்படி நன்மக்கள் பெறுவதால் குடும்பத்தில் அமைதி என்பது நிச்சயம்.
ஆயகலைகள் மொத்தம் கணக்கெடுத்தேர்
அறுபத்தி நாலு என்றார் அனைத்தும் கற்றும்
காயகற்ப மெனும் கலையைக் கற்கா விட்டால்
கற்றதெல்லாம் மண்புக்கும் உடல் விழுந்தால்
மாயமெனும் காந்தம் உயிர் வித்து மூன்றில்
மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்
தீயவினைகள் கழிய உலகென்றும்
தெளிவான அருள் ஒளியாய் நிலைக்கும் ஆன்மா.
நீங்கள் இந்த அற்புதமான கலையை முறையாகப் பயின்றால் வல்லுடலும், நல்லறிவும், பொருள் வளமும், நற்புகழும் ஓங்கிச் சிறப்பாகவும், அமைதியாகவும் வாழமுடியும்.
பயிற்சி நாள் - 19-10-2008 காலை 5.30 து.பே T.P.அமிர்தலிங்கம்
காலை 9.30 து.பே B.பத்மாவதி
No Responses to "குடும்ப அமைதிக்கு காயகல்பகலை"
Post a Comment