வாழ்க வளமுடன்

நம்மொழியில் "கலாச்சாரம்" (Culture) என்ற வார்த்தை இருக்கிறதே அது "கலை" "ஆச்சாரம்" என்ற இரண்டு சொற்கள் இணைந்து உருவான கூட்டுச்சொல் (Compound-word). இதில் "கலை" என்ற வார்த்தை எப்படி வந்தது என்றால் இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக அறிவின் நுட்பத்தினாலே, கைத்தினாலேயே உருமாற்றி, அழகுபடுத்தி நாம் துய்க்கிறோம் பாருங்கள், அதுதான் கலை.

ஆக மனிதன் வாழ்வே கலைதான். அப்படி இந்தக் கலையின் காரணமாக விளைவு தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவுக்கோ, உடல் உணர்ச்சிகளுக்கோ துன்பம் எழாது விழிப்போடு இருந்து கொண்டு, அளவோடு, முறையோடு கலையை நாம் பழகி வந்தோமானால், அந்த நெறியின் பெயரே "ஆச்சாரம்" துன்பம் எழாமல் காக்கக் கூடிய ஒரு நெறி, ஒரு முறை, ஒரு அளவு, இது எல்லாம் பார்த்தோமானால், அதன் பெயர் ஆச்சாரம் என்று சொல்லுவார்கள். அதனால் கலை + ஆச்சாரம் = கலாச்சாரம் என்றானது.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்த போது பார்த்தார்கள்; நல்ல அழகான சொல்லாக இருக்கிறது, நாமும் உச்சரிக்கலாம் என்று எடுத்தவர்கள், இடையிலேயுள்ள நெடிலை விட்டுவிட்டு "Culture" என்று தங்கள் அகராதிக்கு எடுத்துச் சென்றார்கள். "கலாச்சாரம்" என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு பார்த்தோமானால் எப்பொழுதுமே இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி, அறிவினாலோ, கைத்திறனாலோ, உருமாற்றி அழகுபடுத்தியே துய்த்து வாழக் கூடியவர்களாகவே நாம் இருக்கிறோம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "கலாச்சாரம்"