குடும்ப அமைதிக்கு தற்சோதனை (அகத்தாய்வு)
by thirukumaran | Sunday, September 23, 2007 | In by குடும்ப அமைதிக்கு மனவளக்களை | NO COMMENTS
உலகம் எந்த பழக்கங்களிலே வாழ்ந்து வர்கின்றதோ அந்த வழியே, பெற்றோர்களின் பழக்க வழியே, நாமும் சென்று அவற்றையே பழக்கப்பதிவுகளாக்கிக் கொண்டு வாழந்து வருகின்றோம். இவற்றிலே உண்மை நிலை அறிவதற்காகவே ஆறாவது அறிவு கொண்ட இந்த மனித உடல் வந்த போதிலும் கூட அந்த இலட்சியத்தை மறந்து சாதாரணமாகப் பொருள் ஈட்டு அறிவு பலன்களிலே எல்லைகட்டி உணர்ச்சி வயப்பட்ட அறுங்குணங்களாக அடிக்கடி மாறிப் பல செயல்களைச் செய்து வருக்கின்றோம். இதுவே பழக்கமாகி அந்த பழக்கத்தின் வழியே பெரும்பாலும் வாழ்ந்து வருகின்றோம்.
இந்த நிலைமையிலிருந்து நம்மை அமைதிபடுத்திக்கொண்டு கடும்பத்தில் அமைதி காணவும், உலகில் மனித கலத்திலே அமைதி விளைவிக்க வேண்டும். இதற்கு தற்சோதனை (அகத்தாய்வு) மனித இனத்துக்கு மிக மிக அவசியமானது.
இந்த நிலைமையிலிருந்து நம்மை அமைதிபடுத்திக்கொண்டு கடும்பத்தில் அமைதி காணவும், உலகில் மனித கலத்திலே அமைதி விளைவிக்க வேண்டும். இதற்கு தற்சோதனை (அகத்தாய்வு) மனித இனத்துக்கு மிக மிக அவசியமானது.
தன்னைப்பற்றி தன்தேவையைப் பற்றி தன் செயலின் விளைவைப் பற்றி, தன் தகுதியைப் பற்றி, தன் மதிப்பை பற்றி ஆராய்வது தற்சோதனை.
இந்த தற்சோதனையில் பெறும் தெளிவைக் கொண்டு எடுக்கும் முடிவையும் தவத்தினால் மனத்திற்கு கிடைத்திற்கும் உறுதியைக்கொண்டு வாழ்வில் எதிர் காலச் செம்மைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் போது கிடைப்பதுதான் குணநலப்பேறு. இதன் மூலம் நமக்கு நமது குடும்பத்தில் அமைதி, மகிழவு, நிறைவு பெறுகிறோம்.
No Responses to "குடும்ப அமைதிக்கு தற்சோதனை (அகத்தாய்வு)"
Post a Comment